சுடச்சுட

  

  பருவமழை காரணமாக காற்று வீசும் போது மின் கம்பிகள், கம்பங்கள் அறுந்து விழுந்தாலோ அல்லது பழுது ஏற்பட்டாலோ போச்சம்பள்ளி மின் பகிர்மான கோட்டத்தைச் சேர்ந்த நுகர்வோர்கள் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மின்வாரிய அலுவலர்களைத் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
  பர்கூர் நகர், சிப்காட்,வரமலைகுண்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் 9445855512 என்ற எண்ணிலும், குண்டியால்நத்தம்,சிகரலப்பள்ளி,கப்பல்வாடி,ஒப்பத்தவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855513 என்ற எண்ணிலும், எலத்தகிரி, ஒரப்பம்,கந்திகுப்பம், சூளாமலை,சுண்டம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 944585551 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
  இதேபோல, வரட்டப்பள்ளி,பெலவத்தி,சின்னமட்டாரப்பள்ளி,பாலிநாயனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855515 என்ற எண்ணிலும், சத்தலப்பள்ளி,அச்சமங்கலம்,சீமனூர்,கப்பல்வாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445981251 என்ற எண்ணிலும், மத்தூர்,சாணிப்பட்டி,களர்பதி,கவுண்டனூர்,அத்திப்பள்ளம்,குள்ளம்ப்டடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855517 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
  சிவம்பட்டி,நாகம்பட்டி,ஆம்பள்ளி,மாடரஹள்ளி,குட்டூர்,வாலிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855518 என்ற எண்ணிலும், ஜெகதேவி,ஜி.என்.மங்கலம்,கொல்லப்பட்டி,பாகிமானூர்,அஞ்சூர்,ஐகுந்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855519 என்ற எண்ணிலும், சந்தூர்,தொகரப்பள்ளி,மகாதேவகொல்லஹள்ளி,பில்லக்கொட்டாய்,பெருகோபனப்பள்ளி,அத்திகானூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855524 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
  போச்சம்பள்ளி,வடமலம்பட்டி, குள்ளனூர், சிப்காட், பாரண்டப்பள்ளி, தாதம்பட்டி, கொடமாண்டப்பட்டி,பாளேத்தோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855521 என்ற எண்ணிலும், மத்தூர் உதவி செயற்பொறியாளரை 9445855516 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
  அரசம்பட்டி,கீழ்குப்பம்,பாரூர்,புலியூர்,மஞ்சமேடு,பெண்டறஅள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855522 என்ற எண்ணிலும், நாகரம்பட்டி,வேலம்பட்டி,சென்றாம்பட்டிதட்டக்கல்,செல்லம்பட்டி,மருதேரி,பேருஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855523 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.
  பண்ணந்தூர்,குடிமேனஹள்ளி,பாப்பாரப்பட்டி,பந்தரஹள்ளி,வாடமங்கலம்,சாமாண்டப்பட்டி,தேவிரஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445981248 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரைப் பதிவு செய்யலாம்.
  ஊத்தங்கரை,வெங்கடதாம்பட்டி,காந்திநகர்,ராமமூர்த்தி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 9445855541 என்ற எண்ணிலும், உதவிசெயற்பொறியாளர்- போச்சம்பள்ளி 94458-55520 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  மிட்டப்பள்ளி,மோட்டுப்பட்டி,கீழ்குப்பம்,நொச்சிப்பட்டிம மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855542 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சாமல்பட்டி,குமாரம்பட்டி,வெள்ளையம்பதி,கனிச்சி,அந்தேரிóப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் 9445855543 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  இதேபோல, கல்லாவி,சூளகரை,ஆனந்தூர்,சாலமரத்துப்பட்டி,கெரிகேப்பள்ளி,செங்களநீர்ப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445855544 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
  காரப்பட்டு,கதவணி,கருமாண்டப்பதி,அருணபதி,கொம்மம்பட்டு,குன்னத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் 9445981248 என்ற எண்ணிலும், ஊத்தங்கரை உதவி செயற்பொறியாளரை 9445855540 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என போச்சம்பள்ளி மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் அ.ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai