Enable Javscript for better performance
இளவரசன் மரணம்: விசாரணை குழு நீதிபதி நவ. 29-இல் தருமபுரி வருகை- Dinamani

சுடச்சுட

    

    இளவரசன் மரணம்: விசாரணை குழு நீதிபதி நவ. 29-இல் தருமபுரி வருகை

    By DIN  |   Published on : 14th November 2016 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நத்தம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த இளவரசன் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு வரும் 29- ஆம் தேதி தருமபுரி வருகிறார்.
    எனவே, இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் உறுதிமொழிப் பத்திரங்களை நீதிபதியின் முன்னிலையில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நத்தம் குடியிருப்பைச் சேர்ந்த பி. இளங்கோ என்பவரது 20 வயது மகன் இளவரசன் கடந்த 2013,  ஜூலை 4-ஆம் தேதி அரசுக் கலைக் கல்லூரிக்குப் பின்புறம் ரயில் பாதையில் இறந்து கிடந்தார்.
    அந்த இறப்புக்கான காரணம் மற்றும் அதற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு (தனிநபர் விசாரணைக் குழு) வரும் நவ. 29-ஆம் தேதி தருமபுரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.
    இச்சம்பவம் தொடர்பான விவரம் அறிந்தவர்கள் தங்களுடைய உறுதிமொழிப் பத்திரங்களை நீதிபதி முன்னிலையில் அன்று முற்பகல் 11.30 மணிக்கு தாக்கல் செய்யலாம்.
    மேலும் இதுதொடர்பான விவரம் அறிந்தவர்கள் தங்களின் உறுதிமொழிப் பத்திரங்களை விசாரணைக் குழு அலுவலகமான டிபிஐ வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை- 600006 என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai