Enable Javscript for better performance
ஏகலைவன் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் பழங்குடி ஏகலைவன் கல்வியறிவு, வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி மையத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
    தருமபுரி மாவட்ட குருமன்ஸ் நலச் சங்கம் சார்பில் இந்தப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு குருமன்ஸ் நலச்சங்க மாவட்டத் தலைவர் டி. ராசு தலைமை வகித்தார்.
    பயிற்சி மையத்தை ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கண்ணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு, மாவட்ட அமைப்பாளர் எஸ். சீனிவாசன், மாவட்டச் செயலர் கிருஷ்ணன், குருமன்ஸ் பழங்குடி சங்க மாவட்டச் செயலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai