சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம் பிக்கிலி கிராமத்தில் கண் புற்றுநோயால் பாதித்த மாட்டுக்கு, கால்நடை மருத்துவர்கள் கண்ணை அகற்றாமல் வளர்ந்த சதையை மட்டும் அறுவைச் சிகிச்சையில் அகற்றினர்.
  பிக்கிலி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் "ஹால்ஸ்டீன் பிரீசியன்' வகை மாட்டுக்கு இடது கண்ணில் சதை வளர்ந்து கடந்த 6 மாதமாக அவதிப்பட்டு வந்துள்ளது.   வளர்ந்த சதையின் ஒரு பகுதி மற்றும் ரத்தத்தை ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்த பிறகு அது கண் புற்றுநோய் என்பது உறுதி செய்யப்பட்டது.
  இதையடுத்து மருத்துவர்களின் சிகிச்சையில் கண்ணுக்கு வெளியே இருந்த சதையை அகற்றியதுடன், மீண்டும் சதை வளராமல் தடுக்க தடுப்புத் திறன் ஊக்கி மருந்து போடப்பட்டது. சூரியனின் புறஊதாக் கதிரின் தாக்கத்தால் வயதான பிரீசியன் இன மாடுகளுக்கு இவ்வாறான புற்றுநோய் வர வாய்ப்புகள் இருப்பதாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் இரா. தங்கதுரை, கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் கேசவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai