சுடச்சுட

  

  தாட்கோ மூலம் நிலம் வாங்க ஆன்லைனில் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 14th November 2016 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாட்கோ மூலம் நிலம் வாங்க தலித் பெண்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் மகளிர் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 65 வயதுக்குள்ள  மகளிராக இருக்க வேண்டும். மேலும், விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.
  விண்ணப்பதாரர், அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது
  ஒரு திட்டத்தின் கீழ் ஒருமுறை மானிய உதவி பெற்றால், பின்னர் அவர் தாட்கோ செயல்படுத்தும் சிறப்பு மைய உதவியுடனான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது.
  விண்ணப்பதாரர் வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை அவரே தெரிவு செய்து கொள்ள வேண்டும். நிலம் விற்பனைச் செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  இத்திட்டத்தின் கீழ், நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலமும் வாங்கலாம்.
  விண்ணப்பதாரர், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள நிலம் மற்றும் வாங்க உத்தேசித்துள்ள உறுதி செய்துள்ள நிலம் உள்பட 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்துக்குள் இருக்கலாம்.
  சார் பதிவாளரிடமிருந்து நிலத்தின் மதிப்புக்கான வழிகாட்டி மதிப்பு பெறப்பட வேண்டும்.
  விண்ணப்பம் செய்த மகளிர் பெயரில் மட்டுமே வாங்கப்படும் நிலப்பதிவு செய்யப்பட வேண்டும்.
  இத் திட்டத்தின் கீழ், வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
  வாங்கப்படும் நிலத்தை விண்ணப்பதாரர் 20 வருடங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.
  விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 1077, 8903891077, 04342-260007 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai