சுடச்சுட

    

    அரூர் அருகே நிலத் தகராறு காரணமாக 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
    அரூர் வட்டம், புறாக்கல் உட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (42). இவரது உறவினர் செல்வம் (55) இருவருக்கும்  இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது.
    இந்த நிலையில், இரு குடும்பத்தாருக்கும் வழிப்பாதை தொடர்பாக சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் கொடுவாள், இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொண்டனர்.
    இதுகுறித்து ராஜாவும், செல்வமும் தனித்தனியே அரூர் போலீஸில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து புறாக்கல்உட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (35), பார்த்திபன் (30), ரமேஷ் (27), ராஜா மகன் ரஞ்சித் (15) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய தனசேகர் (22), ராஜா (47),  செல்வம் (50) ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai