சுடச்சுட

    

    கோட்டப்பட்டி அருகே மான் வேட்டையாடியதாக தொழிலாளி ஒருவரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
    கோட்டப்பட்டி வனப்பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கோட்டப்பட்டி வனச்சரகர் என்.குணசேகரன் தலைமையிலான வனத் துறையினர் காந்திநகர், கோரையாறு, மந்திகுளாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோரையாறு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் வேலு (37) என்பவர்  வனப் பகுதியில் கம்பிகளால் வலைகள் கட்டி புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து மான் இறைச்சி, கொம்புகளை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai