Enable Javscript for better performance
குழந்தைகள் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    அரூர் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     பண்டித ஜவாஹர்லால் நேருவின் 128-ஆவது பிறந்த நாளையொட்டி குழந்தைகள் தின விழா அரூர் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இதையொட்டி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை அருள்தந்தை டேவிட் சுகுமார் வழங்கினார்.
     ஈரோடு தேசியக் கல்வி மையத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டியில் பங்கேற்ற இப் பள்ளி மாணவர்கள் 71 பேர் சிறப்பிடம் பெற்றனர். இந்தப் பள்ளிக்கு சிறந்த திறன் வளர் பள்ளிக்கான கேடயமும் வழங்கப்பட்டது.
     கலை, இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.கோஸ்மாஸ் ஆகியோருக்கு அருள்தந்தை சுந்தரம் அடிகளார் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி ஆசிரியைகள் ஏ.அமுதா, என்.மரியம்மாள், ஆர்.ஜோதி, எஸ்.நீதியம்மாள், எஸ்.ஜாய்ஸ்ராணி, ஜெ.சில்வியா ஸ்வீட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai