சுடச்சுட

  

  அதிகாரப்பட்டி சின்னேரி அருள்மிகு வேடியப்பன் சுவாமி, முத்து வேடியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
   பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அதிகாரப்பட்டியில் உள்ள சின்னேரி வேடியப்பன், முத்து வேடியம்மன் திருக்கோயில் மகா கும்பிஷேக விழா கடந்த 13-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
   தொடர்ந்து, சக்தி அழைத்தல், கரகம், பூக்கூடை தீர்த்தக்குடம் அழைத்தல், முளைப்பாலிகை , பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு, தீபவழிபாடு, விநாயகர் பூஜை, கலசஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
   திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில், இரண்டாம் கால யாக பூஜை. தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணியளவில், வேடியப்பன், முத்து வேடியம்மன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபிநாத சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் ஏ.கே.ஆர்.காந்தி பட்டாச்சாரியர், சிவாச்சாரியர்கள் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
   இதனையடுத்து, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
   விழாவில், இ.ஆர்.கே கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சொ.அருள்குமார், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் (ஓய்வு) ஜெயராமன், தொழிலதிபர் ப.எழில் மறவன் பழனியப்பன், கோயில் பூசாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai