சுடச்சுட

  

  பணம் எடுக்கச் சென்றபோது வங்கி ஊழியர்கள் தாக்கியதாக புகார்

  By தருமபுரி,  |   Published on : 15th November 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையொன்றில் பணம் எடுக்கச் சென்றவரை ஊழியர்கள் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
   தருமபுரியைச் சேர்ந்த, சிறு தொழில் புரிபவர் அன்பழகன். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தில் செயல்பட்டு வருகிறார். திங்கள்கிழமை சேலம் புறவழிச் சாலையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்ற அவர், தனது கணக்கில் இருந்து ரூ. 10 ஆயிரம் எடுக்க காசோலை அளித்துள்ளார்.
   ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி ரூ. 10 ஆயிரம் வரை எடுக்கலாம் என அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டு, அவர் பணம் தேவை எனக் கேட்டதாகத் தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வங்கி ஊழியர்கள் அன்பழகனைத் தாக்கியதாக தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி அரசு மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டார்.
   சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கோரப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai