சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட 308 மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் கே. விவேகானந்தன் அறிவுறுத்தினார்.
     இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நவீன காதொலிக் கருவிகள் ரூ. 14,400 மதிப்பில் 4 பேருக்கு வழங்கப்பட்டன.
     கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பாப்பாத்தியம்மாள், தனித்துணை ஆட்சியர்கள் வள்ளி, மல்லிகா, ஆதிதிராவிடர் நல அலுவலர் இலாஹிஜான், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai