Enable Javscript for better performance
ரயிலில் தவறவிட்ட மடிக்கணினியை ஒரே மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீஸார்!- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் தவறவிட்ட மடிக்கணினியை ஒரே மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீஸார்!

    By தருமபுரி,  |   Published on : 15th November 2016 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி வழியாக சென்ற பயணிகள் ரயிலில் இளைஞர் தவறவிட்ட மடிக்கணினிப் பையை, ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டு ஒப்படைத்தனர்.
     தருமபுரி டிஏஎம்எஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (27). பொறியியல் பட்டதாரி. இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
     இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு யஷ்வந்த்பூரில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரயிலில் தருமபுரி வந்தார். அவருக்கு இடதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் கட்டு போட்டுள்ளார்.
     இதனால் தன்னுடைய மடிக்கணினி மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய பையை தன்னுடன் பயணித்த நண்பர் ஒருவரிடம் கொடுத்துள்ளார். விக்னேஷ்வரனும் அவரது நண்பரும் மடிக்கணினி பையை மறதியாக ரயிலிலேயே விட்டுவிட்டு தருமபுரி ரயில் நிலையத்தில் இறங்கினர்.
     ரயில் புறப்பட்டுச் சென்ற பிறகு பையைத் தவற விட்டதை அறிந்த விக்னேஷ்வரன் உடனடியாக தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பையில் சான்றிதழ்கள் இருந்ததால் காவல் துறையினர் விரைவாக செயல்பட்டு அடுத்துள்ள சிவாடி ரயில் நிலையத்தில் ரயிலைப் பிடிக்க முயற்சி செய்தனர்.
     ஆனால், ரயில் அந்த நிலையத்தைக் கடந்து விட்டதால் தொப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கிருந்து தொப்பூர் ரயில் நிலையம் சென்ற காவலர்கள் சிலர் குறிப்பிட்ட ரயில் பெட்டியில் சோதனையிட்டு, மடிக்கணினியை மீட்டு மாணவரிடம் ஒப்படைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai