சுடச்சுட

    

    ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறை

    By தருமபுரி,  |   Published on : 15th November 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் விவசாய நிலத்தின் பட்டா மாறுதலுக்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
     தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை அடுத்த மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் போத்துராஜ் (45). இவர் தனது விவசாய நிலத்துக்கான பட்டா மாறுதல் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் குட்டியப்பனை கடந்த 2010-இல் அணுகினார்.
     அப்போது அவர் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத போத்துராஜ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
     அவர்களின் ஆலோசனையின்பேரில், லஞ்சப் பணத்தைக் கொடுக்கும்போது குட்டியப்பன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தருமபுரி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
     வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மணி, குற்றவாளியான முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் குட்டியப்பனுக்கு (60) ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai