சுடச்சுட

  

  கிராம தூய்மைக் காவலர்களை தொடர்ந்து முழுநேரமாகப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியூசி உள்ளாட்சித் துறைப் பணியாளர் சம்மேளனம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். சுதர்சன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆர். ராமமூர்த்தி, ஏஐடியூசி மாவட்டச் செயலர் கே. மணி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே. அரங்கநாதன், அரசுப் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் கோ. பெரியசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
   ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட இதர கோரிக்கைகள்:
   உள்ளாட்சி அமைப்புகளில் தற்போதைய மக்கள்தொகைக் கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களையும் கால முறை ஊதியத்தில் மாற்ற வேண்டும்.
   உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையைக் கைவிட வேண்டும். பேரூராட்சிகளில் பணிபுரிவோருக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் கூட்டுறவுச் சிக்கன சங்கத்துக்கான தொகையை அபராதமின்றி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai