தீ விபத்தில் சரக்கு வாகனம் சேதம்
By அரூர், | Published on : 16th November 2016 07:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நரிப்பள்ளியில் வைக்கோல் ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் தீப்பற்றி எரிந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வகுத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் மனோகரன் (60). ஓட்டுநரான இவர், தனது மினி சரக்கு வாகனத்தில் திருவண்ணாமலையில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு நரிப்பள்ளி - அரூர் நெடுஞ்சாலையில் வந்துள்ளார்.
அப்போது, நரிப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது வாகனத்தில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் அரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் மினி சரக்கு வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. வைக்கோல் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து ஓட்டுநர் மனோகரன் அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.