சுடச்சுட

    

    பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் பேரூராட்சியில் வரி செலுத்தலாம்

    By அரூர்,  |   Published on : 16th November 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரூராட்சி வரிகளை பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் செலுத்தலாம் என பேரூராட்சி செயல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
     இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மா.ராஜா ஆறுமுகம், அ.அமானுல்லா, ஆர்.சாந்தி ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     அரூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர் ஆகிய பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது தொழில் வரி, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், உரிமக் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட தொகைகளை கட்டாயம் செலுத்த வேண்டும். பேரூராட்சிக்கு வரி மற்றும் நிலுவைத் தொகைகளை செலுத்தும் வணிகர்கள், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வழங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai