Enable Javscript for better performance
பாப்பிரெட்டிப்பட்டி அருகே "அம்மா' திட்ட சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே "அம்மா' திட்ட சிறப்பு முகாம்

    By அரூர்,  |   Published on : 16th November 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கோம்பூரில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
     வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு கோட்டாட்சியர் ரா.கவிதா தலைமை வகித்தார். இதில், முதியோர் உதவித்தொகை, ஜாதிச் சான்றிதழ், பட்டா மாறுதல், பட்டா உள்பிரிவு செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், குடிநீர், தெருவிளக்கு, நகர் பேருந்து, சாலை வசதிகள் உள்பட 276 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 105 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
     முகாமில், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் இலாஹிஜான், வட்டாட்சியர் கே.மணி, வட்டவழங்கல் அலுவலர் ஆ.பெருமாள், வருவாய் ஆய்வாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     மத்தூரில்...
     மத்தூர் அருகே களர்பதி பகுதியில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் ஐ.கதிரேசன் தலைமை வகித்தார். போச்சம்பள்ளி வட்டாட்சியர் ஆர்.முருகன் வரவேற்றார். தனி வட்டாட்சியர் மிருணாளினி, வட்ட வழங்கல் அலுவலர் எம்.மகேஸ்வரி, போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜி.அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     முகாமில், பொதுமக்களிடமிருந்து புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட 112 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய 62 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது. இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜானகிராமன், செல்வன், ராகேஷ்சர்மா, சர்வேந்திரன், லெனின், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     களர்பதி கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai