Enable Javscript for better performance
பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

    By தருமபுரி,  |   Published on : 16th November 2016 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மண்டல அளவிலான, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை (நவ.16) தொடங்குகிறது.
     இதுகுறித்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) கு.பாலமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 2016 - 17-ஆம் கல்வி ஆண்டுக்கான சேலம் மண்டல அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பென்னாகரம், மொரப்பூர், தருமபுரி ஆகிய மையங்களில் நடைபெறுகிறது. கைப்பந்து, கோ-கோ, எறிப்பந்து, கபடி ஆகியப் போட்டிகள் 17, 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவியருக்கு நடைபெற உள்ளது.
     இப்போட்டிகளில், முதலிடம் பெறும் மாணவ, மாணவியர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறுவர் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai