சுடச்சுட

  

  யானைகள் வெளியே வருவதை தடுக்க வனப்பகுதியில் தண்ணீர்

  By தருமபுரி,  |   Published on : 16th November 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில், யானைகள் காட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
   தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு மற்றும் ஒகேனக்கல் வனச் சரகங்களில் யானைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை, வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் பருகி வந்தன.
   இந்த நிலையில், மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நீரின்றி காணப்படுகின்றன. இதனால், வன விலங்குகள் தண்ணீரைத் தேடி வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. அப்போது விளை நிலங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட வனத் துறை வனப் பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.
   இதில், பாலக்கோடு வனச்சரகம், பாப்பாரப்பட்டி பிரிவுக்கு உள்பட்ட கோடுப்பட்டி காப்புக்காட்டில் ஏற்கெனவே, வனத் துறையால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், டிராக்டர் மூலம் திங்கள்கிழமை தண்ணீர் நிரப்பப்பட்டது.
   இப்பணியை பாலக்கோடு வனச்சரகர் ஜெகதீசன் தலைமையில் வனவர் முருகன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
   மேலும், தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகளில் யானைகள், மான்கள் கூட்டமாக வந்து தண்ணீர் பருகி செல்கின்றன. இந்தப் பணி பருவமழை வரும் வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai