சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் சிறுதானியங்களில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விளக்கும் வகையில் ராகி வயல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியுதவியுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செயல்படுத்தப்படும் சிறுதானியங்களில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டுதலின் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் திட்டத்தின்படி இந்த விழா நடத்தப்பட்டது.
   பால்சிலம்பு கிராமத்தில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ராகி எம்எல் 365 என்ற ரகம் தங்கராஜ் என்பவரின் வயலில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகளான வரிசை விதைப்பு, விதை நேர்த்தி, சிறுதானிய நுண்ணூட்டக் கலவை இடுதல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் மேலாண்மை முறைகள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன.
   இவற்றால் ஏற்படும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு உணர்த்தும் வகையில் ராகி வயல் விழா நடத்தப்பட்டது. முதன்மை ஆய்வாளர் மா.அ. வெண்ணிலா விளக்கிப் பேசினார். மனையியல் துறை உதவிப் பேராசிரியர் கி. ஜோதிலட்சுமி, முனைவர் க. இந்துமதி, முனைவர் இரா. தங்கதுரை, வட்டார உதவி வேளாண்மை அலுவலர் மூர்த்தி உள்ளிட்டோரும் பேசினர்.
   விழாவுக்கான ஏற்பாடுகளை திட்ட உதவியாளர் செந்தில்குமார்,கிராம முன்னோடி விவசாயி ராமர் ஆகியோர் செய்திருந்தனர். சுமார் 80 விவசாயிகள் பங்கேற்றனர்.
   கணினித் திட்ட உதவியாளர் பபிதா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai