அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் காயம்
By அரூர், | Published on : 17th November 2016 07:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடத்தூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் காயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம், குன்னிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி (60). இவர், தனது இருசக்கர வாகனத்தில் நண்பர்கள் முனுசாமி (55), பெரியண்ணன் (61), ஜடையன் (50) ஆகியோருடன் நான்கு பேராக பொம்மிடி-தாளநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து அவர்கள் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 முதியவர்களும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் சி.சத்தியநாதன் (44) அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.