சுடச்சுட

  

  தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் முறையற்ற கட்டண வசூல்: கட்டுப்படுத்த பாஜக வலியுறுத்தல்

  By அரூர்,  |   Published on : 17th November 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் கூடுதல் கட்டண வசூலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் பெ.வேடியப்பன் வலியுறுத்தியுள்ளார்.
   இதுதொடர்பாக அவர், தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
   அரூர் வட்டம், தீர்த்தமலையில் உள்ள ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்தக் கோயிலுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், பெங்களூரு, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
   தற்போது இந்தக் கோயிலுக்கு ஐயப்பப் பக்தர்கள், ஓம் சக்தி பக்தர்களின் வருகை அதிகம் உள்ளது. இந்த நிலையில், இந்தக் கோயிலுக்கு வரும் கார், சுற்றுலா வேன்கள், பேருந்துகள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு அறநிலையத் துறை நிர்ணயித்த கட்டணங்களை விட பல மடங்குக் கூடுதலாக வசூல் செய்கின்றனர். தீர்த்தகிரீஸ்வரர் மலைக் கோயில், அடிவாரத்திலுள்ள கோயில் வளாகத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த நபர் ஒருவருக்கு ரூ.15 வரையிலும், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ. 200 வரையிலும் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
   கட்டண முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பும் வெளியூர் பக்தர்கள் மிரட்டப்படுகின்றனர். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை கோயில் நிர்வாகம் மேம்படுத்த வேண்டும். கட்டணக் கொள்ளையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
   மேலும் இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கும், அரூர் கோட்டாட்சியருக்கும் அவர் மனு அனுப்பியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai