Enable Javscript for better performance
பணத் தாள்களை மாற்ற சென்றவர்களுக்கு தபால் நிலைய வளாகத்தில் அனுமதி மறுப்பு!- Dinamani

சுடச்சுட

    

    பணத் தாள்களை மாற்ற சென்றவர்களுக்கு தபால் நிலைய வளாகத்தில் அனுமதி மறுப்பு!

    By தருமபுரி,  |   Published on : 17th November 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்களை மாற்ற, அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்றவர்களை வளாகத்திற்குள்ளே அனுமதிக்காததால், சாலையில் நீண்ட நேரம் நின்று பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
     ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்கள் செல்லாது என கடந்த 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள அந்த பணத் தாள்களை, ரூ.4000 வரை அருகிலுள்ள வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறித்திருந்தது.
     இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில், பொதுமக்கள் கடந்த 9-ஆம் தேதி முதல் நாள் தேசிய வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் முன் நீண்ட வரிசையில் நின்று தங்களிடம் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்களை மாற்றிச் செல்கின்றனர். இந்த நிலையில், தருமபுரியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிட, புதன்கிழமை காலை 7 மணியிலிருந்து பெண்கள், மாற்றுத் திறனாளிகள் சிலர் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
     அவர்களை வளாகத்திற்குள்ளே அனுமதிக்காமல், நுழைவு வாயிலைப் பூட்டி சாலையிலேயே நிற்க வைத்தனர். மேலும், நண்பகல் 12 மணி வரை தொடர்ந்து உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.
     இதனால், நீண்ட நேரம் சாலையோரம் வெயிலில் நின்று அவதிக்குள்ளான பொதுமக்கள், ஊழியர்களிடமும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பணம் மாற்றித் தரும் வரை, வெயிலில் நிற்க வைக்காமல், வளாகத்திற்குள்ளே தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
     இதைத் தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு மேல் அஞ்சல் அலுவலகம் தரப்பில் பணம் பெற்றுக் கொண்டு வந்து, வரிசையில் நின்றிருந்த சிலருக்கு மாற்றித் தரப்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai