சுடச்சுட

  

  புதிய ஊதியக் குழு அமைக்கக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்னா

  By தருமபுரி,  |   Published on : 17th November 2016 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய ஊதியக் குழு அமைத்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலர் ஏ. சேகர், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் ஆறுமுகம், வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் யோகராசு, சுகாதார நலச் சங்க மாநிலத் துணைத் தலைவர் கே. கரிகாலன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
   கிருஷ்ணகிரியில்...
   கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற தர்னா போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.
   மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசு ஊழியர்களுக்கு உடனடியாக ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai