சுடச்சுட

    

    3-ஆவது நாளாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

    By தருமபுரி,  |   Published on : 17th November 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில், 3-ஆவது நாளாக புதன்கிழமை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
     ரூ.500 மற்றும் ரூ.1000 பணத் தாள்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்ததால், கூட்டுறவு வங்கிகளில் இருந்து அந்த தாள்கள், மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதற்கான நிகரான பணம் அந்த வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நிதியின்றி கூட்டுறவு வங்கிகளில் பணப் பரிவர்தனை முடங்கியது.
     இந்த நிலையைப் போக்கி, உரிய நிதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த திங்கள்கிழமை முதல், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 132 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்.
     இதில், முதல் நாள் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர், முதல் நாள் மத்திய வங்கியை முற்றுகையிட்டனர். இருப்பினும், தொடர்ந்து வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதாதல், விவசாயிகள், நகைக்கடன் பெறுவோர் என அனைத்துத் தரப்பினரும் பாதிகப்படுவதாக் கூறி, கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     மேலும், நிதி ஒதுக்கீடு விரைந்து செய்யக் கோரி, வியாழக்கிழமை (நவ.17) தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai