Enable Javscript for better performance
"அம்மா' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அரூரை அடுத்த நம்பிப்பட்டியில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார்.
     முகாமில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தெருவிளக்கு, சாலை வசதிகள், புதிய குடும்ப அட்டைகள், ஜாதிச்சான்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், பட்டா உள்பிரிவு செய்தல், பட்டா மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 131 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 65 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது.
     இதில் வட்டாட்சியர் கே.மணி, தனி வட்டாட்சியர் சி.மாறன், வட்ட வழங்கல் அலுவலர் ஆ.பெருமாள், வருவாய் ஆய்வாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     கோட்டப்பட்டியில் நடைபெற்ற "அம்மா' திட்ட சிறப்பு முகாமில், வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் 92 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 56 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் கோட்டப்பட்டி வனச்சரகர் என்.குணசேகரன், வருவாய் ஆய்வாளர் ஞானபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai