சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பணியாளர் ஒருவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ஜெயக்குமார் (48). இவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பகுதிநேர ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
     இந்த நிலையில், ஜெயக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டி-பொம்மிடி சாலையில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் ஜெயக்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai