சுடச்சுட

  

  கர்வம் தவிர்த்தால் ஆனந்தமாக வாழலாம்: சுகிசிவம்

  By தருமபுரி,  |   Published on : 19th November 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்வங்களை தவிர்த்தால், ஆனந்தமாக வாழலாம் என சொற்பொழிவாளர் சுகிசிவம் கூறினார்.
   தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "ஆன்மிகத்தில் ஆனந்தம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: நமது வாழ்வில் துக்கப்படுவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். ஜாதி, குலம், மதம், செல்வம் என்ற பல்வேறு செருக்குகளால் வரும் அகங்காரமே இந்த துக்கம் வருவதற்கு காரணமாகும். இதனைத் தவிர்த்தாலே அனைவரும் ஆனந்தமாக வாழமுடியும். இவை எதுவும் இல்லாததாலேயே ஞானிகள் கவலையின்றி இருக்கின்றனர்.
   கடந்த காலங்களில் நாம்பட்ட துன்பங்களை, நிகழ்காலத்திலும் நினைத்து வருந்துவது வாழ்வல்ல. மாறாக, அதிலிருந்து விடுபட்டு வாழ்வதே மகிழ்ச்சியைத் தரும்.
   நமது விருப்பத்தை நமது குழந்தைகளின் மீது திணிக்காமல், அவர்கள் விருப்பத்தை தேர்வு செய்ய அவர்களுக்கு நாம் உரிமை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆலோசனை வழங்கலாம்.
   கோயில்களுக்கு வெளியே யாரையெல்லாம் நிற்க வைத்தோமோ, அவர்களே மாற்று மதத்துக்கு மாறியுள்ளனர்.
   ஆலயங்களில் அனைவரும் சமம் என்பதை தான் அவை நமக்கு உணர்த்துகின்றன. அங்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை. இதை ராமனுஜர் தனது வாழ்வில் உணர்த்தியிருக்கிறார்.
   துன்பங்கள் அனைவருக்கும் வரும். அதை அறிந்துகொண்டாலே அதற்கான தீர்வு கிடைக்கும். தீய எண்ணங்களை தவிர்த்து, அமைதியுடன் இருந்தாலே ஆனந்தமாக வாழலாம் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai