சுடச்சுட

    

    கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By தருமபுரி,  |   Published on : 19th November 2016 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செல்லாதவை என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைத் திரும்பப் பெறக் கோரி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் (ஏஐபிஇஏ) வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச் செயலர் கே.கே.சரவணன் தலைமை வகித்தார். பொருளர் வி.எம்.முனிராஜ், உதவி செயலர்கள் கே.என்.அறிவழகன், ஆர்.தேவராஜன், இயக்குநர்கள் ஜி.பூவராகவன், அமீர்ஜான், ரிக்வான்அலி, ஆர்.சம்பத்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
     இதில், பணப் பரிவர்த்தனையைத் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, வரும் 22-ஆம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய தர்னா போராட்டம் நடத்தவுள்ளதாகவும், அதையடுத்து 25-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாகவும் சங்கத்தின் பொதுச் செயலர் கே.கே.சரவணன் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai