சுடச்சுட

  

  பச்சையம்மன் கோயில் எதிரில் ரூ.29.60 லட்சத்தில் பாலம்

  By தருமபுரி,  |   Published on : 19th November 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியில் பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள சாலையில் ரூ.29.60 லட்சத்தில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
   தருமபுரி பழைய தேசிய நெடுஞ்சாலையில் பச்சையம்மன் கோயில் எதிரே, தனியார் பள்ளி முன் மழைக் காலங்களில் குளம்போல சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியே இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். மேலும், இருசக்கர வாகனங்கள் பழுதடைவதோடு, விபத்துக்குள்ளாகும் சூழலும் நிலவியது. இதில், கழிவுநீரும் கலந்து சுகதார சீர்கேடு ஏற்படுத்தியது.
   இதைத் தவிர்க்க, அப்பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து அந்த இடத்தில் சிறுபாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு, அதற்கான நிதியாக ரூ.29 லட்சத்து 60 ஆயிரம் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்மையில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணி இரண்டு மாதங்களில் நிறைவடைய உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai