சுடச்சுட

    

    சேலம் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மொரப்பூரில் வியாழக்கிழமை தொடங்கின.

     2016-17-ஆம் கல்வி ஆண்டில், சேலம் மண்டல அளவில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் இம் மாதம் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பல்வேறு மையங்களில் நடைபெற்றன.
     மொரப்பூர் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சேலம், சங்ககிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் ஆகிய 5 கல்வி மாவட்டங்களுக்கான ஆண்கள் கபடி மற்றும் எறிபந்து போட்டிகளை, கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி.முத்து தொடக்கி வைத்தார். இதில், கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலர் பன்னீர்செல்வம், பொருளர் காந்தி, தாளாளர்கள் டி.சொக்கலிங்கம், ஏ.மோகன்ராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     மகளிர் கபடி
     சேலம் மண்டல அளவிலான 17 மற்றும் 19-வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவியருக்கான கபடி போட்டிகள் மொரப்பூர் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இதில், 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் சேலம் மாவட்டம் மின்னம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் முதலிடமும், ஒசூர் மாசிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் 2-ஆம் இடமும், தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 3-ஆம் இடமும் பெற்றனர்.
     அதேபோல், 19-வயதுக்கு உள்பட்ட மாணவியர் கபடி போட்டியில், தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் முதலிடமும், மொரப்பூர் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவியர் 2-ஆம் இடமும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 3-ஆம் இடமும் பெற்றனர்.
     விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் கு.பாலமுருகன், மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவர் சென்னகிருஷ்ணன், குணசேகரன், ஜெகன் உள்ளிட்டோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai