சுடச்சுட

  

  மின்சாரம் தாக்கி இளைஞர் சாவு: இழப்பீடு கோரி போராட்டம்

  By அரூர்,  |   Published on : 19th November 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரூர் அருகே மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த பிரபுவின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   அரூர் வட்டம், ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபு (24), மின் கம்பம் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கியதில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
   இந்த நிலையில், உயிரிழந்த பிரபுவின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து, பிரபுவின் உறவினர்கள் சடலத்தை வாங்காமல், அரூர் அரசு மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இதனையடுத்து அரூர் வட்டாட்சியர் செல்வராஜ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
   அதில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு முதல்கட்டமாக இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும், கூடுதல் இழப்பீடு கிடைப்பதற்கு மின்வாரியத்துக்கு பரிந்துரைகள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai