சுடச்சுட

  

  சூளகிரி அருகே மினி லாரி மீது லாரி மோதியதில், 100 கோழிகள் உயிரிழந்தன.
   திருப்பூரில் இருந்து ஐதராபாத்துக்கு 500-க்கும் மேற்பட்ட கோழிகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை திருப்பூரைச் சேர்ந்த முருகன் (45) ஓட்டிச் சென்றார். இதே போல, சென்னையில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு சூளகிரி வழியாக ஒசூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அலகுபாவி என்ற இடத்தில் முருகன் மினி லாரியை திருப்பினாராம்.
   அப்போது, பின்னால் வந்த லாரி மினி லாரியின் மீது மோதியது. இதில் கோழிகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தன. மேலும், மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் முருகன் மற்றும் உதவியாளர் பாலகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai