சுடச்சுட

  

  அரூரிலிருந்து தொட்டம்பட்டி, எலவடைக்கு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து அந்தக் கட்சியின் இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் கே.குமார், தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
  அரசுப் போக்குவரத்து கழகம் அரூர் கிளையிலிருந்து தடம் எண்: 2, 26 ஆகிய நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் மோப்பிரிப்பட்டி, எச்.ஈச்சம்பாடி, தாமரைக்கோழியம்பட்டி, தாமலேரிப்பட்டி, மருதிப்பட்டி, எம்.வெளாம்பட்டி, தொட்டம்பட்டி ரயில் நிலையம், மொரப்பூர், எலவடை உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.
  இந்த வழித்தடத்தில் வழக்கமாக இயங்கி வந்த அரசு பேருந்துகள் வேறு வழித்தடங்களுக்கு மாற்றப்பட்டு, இந்த வழித்தடத்தில் மிகவும் பழுதான பழையப் பேருந்து இயக்கப்படுகிறது.  இந்த பேருந்து அடிக்கடி பழுதாகி பாதியிலே நிற்கிறது.
  மோசமான பேருந்துகளை இயக்குவதால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு பயணிகள் உரிய நேரத்துக்குச் செல்ல முடிவதில்லை. எனவே, அரசுப் பேருந்து தடம் எண்: 2, 26 ஆகிய வழித்தடத்தில் புதிய நகர்புறப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai