Enable Javscript for better performance
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 5 பெட்ரோல் பங்குகளில் பணம் பெறும் வசதி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 5 பெட்ரோல் பங்குகளில் பணம் பெறும் வசதி

    By DIN  |   Published on : 20th November 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரத ஸ்டேட் வங்கியுடன் இந்தியன் ஆயில் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எஸ்.பி.ஐ. கடன் அட்டைகளைக் கொண்டு ரூ. 2 ஆயிரம் பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பெட்ரோல் பங்குகளில் "கேஷ் பாயிண்ட்' அமைக்கப்பட்டுள்ளன.
    அதன்படி, தருமபுரி நேதாஜி புறவழிச்சாலையில் உள்ள ஸ்ரீ பாலாஜி பெட்ரோலியம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டையிலுள்ள அம்மன் பெட்ரோலியம் மற்றும் பொம்மிடியிலுள்ள முனிரத்னம் பியூவல்ஸ் ஆகிய மூன்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள கையடக்கக் கருவியில் எஸ்.பி.ஐ. டெபிட் அட்டையைத் தேய்த்தால், பெட்ரோல் நிலையத்தினர் ரூ. 2 ஆயிரம் வழங்குகின்றனர்.
    ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து வங்கிகளில் ஏற்பட்டுள்ள கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ.2 ஆயிரம் பணம் பெறலாம்.
    ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு வங்கி, ஏடிஎம் மையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில்,பாரத ஸ்டேட் வங்கியின் பாயிண்ட் ஆப் சேல்ஸ் என்ற கருவி மூலம் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணம் பெறலாம்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ராஜமுருகன் பியூல்ஸ், பேரண்டப்பள்ளி கிராமம், போச்சம்பள்ளி வட்டம். வி.எஸ்.பி. பியூல்ஸ்,புக்கசாகரம் ஆகிய பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணம் பெறலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai