சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அதன் இயக்குநர் அர்ச்சனா பட்நாயக் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  மொரப்பூர் ஜடையம்பட்டி, மூக்கனூர் செம்மன அள்ளியில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்கப்பட்ட தோட்டங்களை அவர் ஆய்வு செய்தார். பாப்பிநாயக்கன அள்ளி வருவாய் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டுக்காரம்பட்டியில் ரோஜா சாகுபடிக்கான பசுமைக் குடில், காரிமங்கலத்தில் குடைமிளகாய் சாகுபடிக்கான பசுமைக்குடில் ஆகியவற்றை பார்வையிட்டார்.
  போளையம்பள்ளியில் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தக்காளி நாற்றுகள், கத்தரி நாற்றுகள் போன்றவற்றையும் இயக்குநர் ஆய்வு செய்தார். பண்ணை வளாகத்தில் பழ மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டன.
  நுண்ணீர்ப் பாசனத் திட்டத்துக்காக மத்திய அரசிடமிருந்து தற்போது பெறப்பட்டுள்ள ரூ. 6 கோடியை ஆதிதிராவிட விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
  தொடர்ந்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அர்ச்சனா பட்நாயக் பங்கேற்றார். வத்தல்மலையில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
  ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் ப. அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai