சுடச்சுட

  

  பணியில் கவனக்குறைவு: மின்வாரிய  ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்

  By DIN  |   Published on : 20th November 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணியின் போது கவனக்குறைவாகச் செயல்பட்டதால் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளர் உயிரிழந்தது தொடர்பாக மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
  அரூர் வட்டம், ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பிரபு (24). இவர், ஒப்பந்தத் தொழிலாளியாக மின் வாரியத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வேடகட்டமடுவு ஊராட்சி, தாம்பல் பகுதியில் மின் கம்பம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது,மின் கம்பம் மீதிருந்த பிரபுவிடம் தரையில் நின்றிருந்த தொழிலாளர்கள் கம்பியை மேலே வீசினர். அப்போது, அந்த மின் கம்பியானது அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பிகள் மீது உரசியது.
  இதனால், மின்சாரம் தாக்கப்பட்ட பிரபு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதையடுத்து, தொழிலாளி பிரபு உயிரிழந்த சம்பவம் குறித்து மின் வாரிய உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
  விசாரணையில், பணியின் போது கவனக்குறைவாகவும், பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதற்காக தீர்த்தமலை பகுதியில் பணிபுரியும் போர்மேன் ராமு, கள உதவியாளர் ரமேஷ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உதவி செயற்பொறியாளர் கண்ணன் உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai