சுடச்சுட

    

    பொம்மிடி அருகே பண மோசடியில் ஈடுபட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.துறிஞ்சிப்பட்டி-சாலவலசு சாலையில் பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர் அயூப்கான் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலவலசு பகுதியிலுள்ள ஒரு மாரியம்மன் கோயில் அருகே ஒரு கும்பல்  கோபுர கலசம் மற்றும் பித்தளை சொம்புகளைப் பயன்படுத்தி இரிடியம், பண மோசடிகளை செய்ய திட்டமிட்டிருந்ததாம்.
    இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் அயூப்கான் அளித்த புகாரின் பேரில், கொண்டேஹள்ளியைச் சேர்ந்த வெங்கட்டமணி மகன் பிரபு (32), மடதஹள்ளியைச் சேர்ந்த சென்னன் மகன் அன்பழகன் (62), கொண்டகரஹள்ளியைச் சேர்ந்த பசுவன் மகன் மாரிமுத்து (45), ரேகடஹள்ளியைச் சேர்ந்த பள்ளிக்கூடத்தான் மகன் முனிராஜ் (45), சேலம் மாவட்டம் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பாண்டு மகன் மணி (40), நடேசன் மகன் குப்புசாமி (55), மோகன் மகன் ரவீந்திரன் (45), கோவை பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திகேயன் (44) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
    இந்தச் சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai