Enable Javscript for better performance
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
     கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட (மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு தளர்வு) ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் நவ. 28ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai