Enable Javscript for better performance
டேபிள் டென்னிஸ்: நத்தமேடு பள்ளி மாணவியர் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    டேபிள் டென்னிஸ்: நத்தமேடு பள்ளி மாணவியர் முதலிடம்

    By தருமபுரி  |   Published on : 21st November 2016 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்டல அளவிலான டேபிள் டென்னில் போட்டியில், நத்தமேடு அரசுப் பள்ளி மாணவியர் முதலிடம் பெற்று சாதனை புரிந்தனர்.
     சேலம் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் விஜய் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், நாமக்கல், சங்ககிரி ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்நந்த மாணவ, மாணவியர் பங்கேற்று விளையாடினர். இதில், தருமபுரி மாவட்டம், நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் வி.சுஜாதா, கே.சுவேதா ஆகியோர் 17 வயது உள்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்றனர். மேலும், வரும் 2017 பிப்ரவரி மாதம் சிவகங்கையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றனர். இந்த மாணவியரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai