சுடச்சுட

  

  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆகியவற்றின் சார்பில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச. 4 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
   டிச. 4-ஆம் தேதி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், டிச. 18-ஆம் தேதி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
   5-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு, தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேர்வு செய்யலாம். முகாமில் கலந்து கொண்டு இளைஞர்களைத் தேர்வு செய்ய விரும்பும் தொழில் நிறுவனங்கள் மட்டும், வரும் நவ. 25-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் 2-ஆம் தளத்திலுள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநரை நேரில் சந்தித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai