சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டத்தில் 5 கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நவீன மயம்: அமைச்சர் தகவல்

  By தருமபுரி  |   Published on : 21st November 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, அரூர், கம்பைநல்லூர், பாலஜங்கமணஅள்ளி ஆகிய 5 இடங்களில் உள்ள கூட்டுறவுக் கடன் சங்கங்களை ரூ. 75 லட்சத்தில் நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
   தருமபுரியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் ரூ.35.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 70 பயனாளிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கிப் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 27,928 விவசாயிகள் பெற்ற ரூ. 139.63 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 3,276 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் அக்டோபர் வரை 64,318 பயனாளிகளுக்கு ரூ. 317 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 20.46 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், நிகழாண்டில் அக்டோபர் வரை 2,424 பயனாளிகளுக்கு ரூ. 7.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.
   நிகழாண்டில் அக்டோபர் வரை 6,942 டன் உரம் ரூ. 11.14 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் விவசாய விளை பொருள்களான நிலக்கடலை, மஞ்சள், பருத்தி, எள் உள்ளிட்டவை ரூ. 66.37 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
   விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள் ரூ. 52.45 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனன. 123 சங்கங்களுக்கு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. பென்னாகரம், பாப்பாரப்பட்டி, அரூர், கம்பைநல்லூர் மற்றும் பாலஜங்கமணஅள்ளியிலுள்ள கூட்டுறவுக் கடன் சங்கங்களை ரூ. 75 லட்சத்தில் நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கம்பைநல்லூர், கெலவள்ளி ஆகிய கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உயர்தர பாதுகாப்புப் பெட்டகங்கள் ரூ. 10 லட்சத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 13 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 47 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன என்றார் அன்பழகன்.
   விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி. பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), ஆர்.ஆர். முருகன் (அரூர்), கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் க. பாண்டியன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் கி. ரேணுகா, வங்கித் தலைவர் பி.என்.ஏ. கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai