சுடச்சுட

  

  பேரூராட்சிகளில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு: ஆட்சியர் தகவல்

  By தருமபுரி,  |   Published on : 21st November 2016 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு தெரு வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்) திட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அறிவித்துள்ளார்.
   இந்தக் கணக்கெடுப்புக்கு சாலையோர வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்கி முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
   தமிழ்நாடு தெரு வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்) திட்டம் மற்றும் விதிகள் 2015 அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
   இதன்படி, தெருவியாபாரிகள் நலன் கருதி திட்டம் தீட்டுதல், கணக்கெடுத்தல், நிபந்தனைக்குட்படுத்தி தகுதியுடையோருக்கு சான்றிதழ் வழங்குதல், பரப்பளவுக்கு ஏற்ப வியாபாரக் கட்டணம் செலுத்துதல், மாற்று இடம் ஒதுக்கீடு செய்தல், தகுதியற்ற இடங்களில் வியாபாரத்தைக் கட்டுப்படுத்துதல், சான்றிதழை ரத்து செய்தல், சுற்றுப்புறச் சூழலைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றை முன்வைத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
   தருமபுரி மாவட்டத்தில் அரூர், கடத்தூர், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், பொ. மல்லாபுரம் ஆகிய பேருராட்சிகளில் தீர்மானங்கள் இயற்றப்பட்டு, கணக்கெடுப்புப் பணிகள் கடந்த
   14ஆம் தேதி தொடங்கியுள்ளன.
   கணக்கெடுப்பின்போது, சாலையோர வியாபாரிகள் தங்களது பெயர், வசிப்பிடம், பிறந்த தேதி, வகுப்பு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் எண், செய்யும் தொழில், வியாபாரத்தின் அமைவிடம் முதலான சுய விவரங்களைத் தெரிவித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai