சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்க நவ 24-இல் நேர்முகத் தேர்வு

    By தருமபுரி,  |   Published on : 21st November 2016 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, விலையில்லா தையல் இயந்திரம் வழங்குவதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்யும் நேர்முகத் தேர்வு, வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
     18 முதல் 45 வயதுக்குள்பட்ட, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம். கல்வித் தகுதி மற்றும் வருமான வரம்பு எதுவும் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai