கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது
By அரூர், | Published on : 22nd November 2016 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மொரப்பூரில் கத்தியைக் காட்டி பணம் பறித்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த ஒபிலிநாயக்கன்ஹள்ளியைச் சேர்ந்தவர் முரளி (49). இவர், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் பழக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் பழங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து பழக்கடை உரிமையாளர் முரளி கேட்டபோது, அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். தொடர்ந்து, முரளியிடம் இருந்த பணம் ரூ.300-யை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து முரளி அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் அரூரை அடுத்த பேதாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைமூர்த்தி (28) என்பதும், இவர் மீது பல்வேறு காவல்
நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, வழிப்பறி சம்பவம் தொடர்பாக கலைமூர்த்தியை மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர்.