சுடச்சுட

  

  மாநில தடகளப் போட்டிகளில் வென்ற இளைஞருக்கு ரூ. 1 லட்சம் பரிசு!

  By தருமபுரி,  |   Published on : 22nd November 2016 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல்வர் கோப்பைக்கான மாநில தடகளப் போட்டிகளில் (2015-16) வென்று தருமபுரிக்குப் பெருமை சேர்த்த தடகள வீரர் வி. வெள்ளையத்தேவனுக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.
   தருமபுரி மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், முதல் 3 இடங்களில் வென்ற 413 வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கினார்.
   அப்போது மாநில போட்டிகளில் வென்ற அதியமான்கோட்டையைச் சேர்ந்த வி. வெள்ளையத்தேவனுக்கும் ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
   நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி. பழனியப்பன், அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.ஆர். முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai