சுடச்சுட

  

  பல்லி விழுந்த தண்ணீரை அருந்திய குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

  By DIN  |   Published on : 23rd November 2016 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியை அடுத்த சோகத்தூர் அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த தண்ணீரை அருந்திய குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
  சோகத்தூர் மேட்டுத்தெரு பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதன் பொறுப்பாளராக மாரம்மாள் என்பவர் பணியாற்றுகிறார். செவ்வாய்க்கிழமை 7 குழந்தைகள் மட்டுமே மையத்துக்கு வந்திருந்தனர். இங்குள்ள குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீரை அருந்திய குழந்தைகள் 7 பேருக்கும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
  இதுதொடர்பாக, மையப் பொறுப்பாளர் மாரம்மாள் அளித்த தகவலின் பேரில், பெற்றோர்கள் விரைந்துச் சென்று குழந்தைகளை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
  இதில், ஜானகிராமன் (3), ஜான்சிகா (3), சகானாஸ்ரீ (3), மித்ரா (3), ஜீவிதா (3), கௌதம் (3) உள்ளிட்ட 6 குழந்தைகளும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ப்ரீத்தா (2) என்ற குழந்தை மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  இதைத் தொடர்ந்து அங்கன்வாடி மையக் குடிநீர்த் தொட்டியை பரிசோதித்ததில், அதில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து, தருமபுரி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai