Enable Javscript for better performance
அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    By தருமபுரி,  |   Published on : 24th November 2016 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்களை செல்லாது என அறிவித்த, மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, தருமபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் முன் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     சிஐடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலர் சி.நாகராஜன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்டச் செயலர் கே.மணி, தொமுச மாவட்டச் செயலர் ஏ.மணி, எச்எம்எஸ் மாவட்டச் செயலர் எம்.அர்ஜூனன்,ஏஐசிசிடியூ மாவட்டச் செயலர் சி.முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
     ஆர்ப்பாட்டத்தில், ரூ.500, ரூ.1000 பணத்தாள்களை செல்லாது என அறிவித்து, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதற்கான மாற்று வழியினை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
     கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்கிட வேண்டும். வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ள, இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     ஒசூரில்...
     ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வேப்பனப்பள்ளி முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
     ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் குப்புசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இதில், சி.பி.ஐ. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் லகுமய்யா, தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
     கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் யுவராஜ், நகரச் செயலாளர் மாதேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வாசுதேவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் ராமச்சந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai