சுடச்சுட

  

  கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தருமபுரி வள்ளலார் திடலில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
   கூட்டமைப்பு மாவட்டப் பொருளாளர் எம்.அர்ஜூனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.வி.சக்திவேல் வரவேற்றார்.
   தொழிலாளர்கள் நலவாரிய முன்னாள் தலைவர் பொன்குமார் போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
   கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலர் மலர் ஆறுமுகம், மாநிலத் துணைத் தலைவர் ஏ.சி.நடராஜன், மாநில இணைப் பொதுச் செயலர் ஜி.மனோகரன், அமைப்புச் செயலர்கள் எம்.துரை மதிவாணன், என்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், நலவாரிய பதிவு புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் ஆகியவற்றை இணையதளம் மூலம் மேற்கொள்ளும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.
   வாரிய அலுவலகத்துக்கு வரும் தொழிலாளர்களை அலைக்கழிக்காமல் அவர்கள் கோரும் பணிகளை விரைந்து செய்துதர வேண்டும்.
   ஓய்வூதியம், திருமண உதவித் தொகை, விபத்து மரணம் உதவித் தொகை ஆகியவை தாமதிக்காமல் உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் பிரதி மாதம் 10-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai