சுடச்சுட

    

    ஆளில்லா குட்டி விமானம் மூலம் சாகுபடி பரப்பு ஆய்வு

    By தருமபுரி,  |   Published on : 24th November 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் தொடர்பாக, சாகுபடி பரப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது.
     பாலக்கோடு அருகே பெரியானூரில், ஆளில்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு செய்யும் பணியைத் தொடக்கி வைத்து மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டில் இதுவரை இயல்பு மழையை விட 50 சதவீதத்துக்கு குறைவாகவே பெய்துள்ளது.
     எனவே, நிகழ் பருவத்தில் பயிர் சாகுபடி செய்ய இயலுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆய்வு மூலம் விவசாயிகளுக்கு எவ்வித தடையுமின்றி காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவ்விதம் ஆய்வு மேற்கொள்வதால், பருவத்தில் விதைக்க முடியாமல் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு எவ்வித விடுபடுதலுமின்றி காப்பீட்டுத் தொகை வழங்க வழிவகை செய்யப்படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், வேளாண் இணை இயக்குநர் சி,ராஜேந்திரன், அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் செந்தில்குமார், வேளாண் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai